ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் யார்?

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
டி.ஆா்.பாலு
டி.ஆா்.பாலு

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக டி.ஆர்.பாலு அறிவிக்கப்பட்டுள்ளார்.

வேட்பாளர் பெயர்: டி.ஆர்.பாலு

வயது: 83

தந்தை பெயர்: ராசு

கல்வித் தகுதி: பி.எஸ்.சி., எல்.சி.இ.,

தொழில்: கல்வியாளர்

மனைவி: ரேணுகா தேவி, பொற்கொடி.

குழந்தைகள்: 3 மகன்கள், 2 மகள்கள்.

திமுக பொருளாளராக இருக்கும் டி.ஆர்.பாலு, அக்கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார்.

முதல்முறையாக 1986-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய சென்னையில் இருந்து 1996 முதல் 2004 வரை நடைபெற்ற 4 மக்களவைத் தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளார்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 2009 மற்றும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் மூன்றாவது முறையாக அதே தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

பெட்ரோலியம், சுற்றுச்சூழல், போக்குவரத்து, நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளார்.

இவரது மகன் டிஆர்பி ராஜா தமிழக தொழில்துறை அமைச்சராகவும், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராகவும் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com