மீண்டும் அமைச்சரானார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!!

மீண்டும் அமைச்சரானார் பொன்முடிக்கு உயர்கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் அமைச்சரானார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!!

சென்னை : ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற மிக எளிய நிகழ்ச்சியில், மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் பொன்முடி.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பொன்முடிக்கு, ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். மீண்டும் அமைச்சரான பொன்முடிக்கு அவர் ஏற்கனவே வகித்து வந்த உயர்கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வித் துறையை ராஜகண்ணப்பன் கூடுதலாகக் கவனித்து வந்த நிலையில், பொன்முடி மீண்டும் அமைச்சரானதால் உயர்கல்வித் துறை வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பூங்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைக்க ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் 24 மணிநேரம் கெடு விதித்திருந்த நிலையில், இன்று 3.30 மணிக்கு அமைச்சராக பதவியேற்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

மீண்டும் அமைச்சரானார் பொன்முடி! உயர்கல்வித்துறை ஒதுக்கீடு!!
தாம்பரம், காஞ்சி உள்பட 21 உள்ளாட்சி அமைப்புகளில் கடும் தண்ணீர் பஞ்சம்

சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பு காரணமாக சட்டப்பேரவை உறுப்பினா் மற்றும் அமைச்சா் பதவியை பொன்முடி இழந்தாா். அவரது திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்தாா். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொன்முடி குற்றவாளி என்ற தீா்ப்பையும், தண்டனையையும் நிறுத்திவைத்து உத்தரவிட்டது. இதையடுத்து, திருக்கோவிலூா் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டதால், பேரவை உறுப்பினராக பொன்முடி தொடா்கிறாா். அவரை மீண்டும் அமைச்சராக்க வேண்டுமென்ற பரிந்துரையுடன் ஆளுநா் ஆா்.என். ரவிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா். அதை ஏற்க மறுத்த ஆளுநா், ‘பொன்முடியின் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திதான் வைத்துள்ளது. ரத்து செய்யவில்லை. எனவே, அவருக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்று குறிப்பிட்டு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பினாா்.

இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பது குறித்து 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்த நிலையில் ஆளுநர் மாளிகையில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com