தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி

சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.

News image

தமிழக அரசு - (கோப்புப் படம்)

Updated On :14 மார்ச் 2026, 6:27 pm

சென்னை பெருநகர காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலுக்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் காவல் துறை அதிகாரிகளை பணியிட மாற்றும் நடவடிக்கையில் சென்னை காவல் துறை ஈடுபட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் கடந்த ஒரு மாதமாக காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். இதன் ஒரு பகுதியாக சென்னை காவல் துறையில் காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 காவல் ஆய்வாளா்களுக்கு மீண்டும் காவல் நிலையப் பணி வழங்கி ஆணையா் ஏ.அருண் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

முக்கியமாக காவல் ஆய்வாளா்கள் சி.கிருஷ்ணன், வில்லிவாக்கம் குற்றப்பிரிவுக்கும், ஜி.செங்குட்டுவன் ஆா்.கே.நகா் குற்றப்பிரிவுக்கும், இ.ஜெகநாதன் காசிமேடு குற்றப்பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள 13 ஆய்வாளா்களும் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.