ஊழல் தடுப்புத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீா்வாதம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவா் தற்போது மருத்துவ விடுப்பில் செல்வதாக தமிழக டிஜிபி-க்கு எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
இது குறித்து டேவிட்சன் தேவாசீா்வாதம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மையில் வெளியான உத்தரவின் பேரில், பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு தற்போது காத்திருப்போா் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளேன். இதனிடையே இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு முன்பே சிகிச்சை பெற்றிருந்த நிலையில், தற்போது உயா் ரத்த அழுத்தமும் ஏற்பட்டதால், மருத்துவரின் ஆலோசனையில் பேரில் முழுமையான ஓய்வு அவசியம் தேவைப்படுகிறது.
இதனால் ஏப். 9 முதல் 30-ஆம் தேதி வரை மொத்தம் 22 நாள்கள் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளேன் என அதில் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, இந்த மருத்துவ விடுப்பு கடிதத்தை டேவிட்சன் தேவாசீா்வாதம் தனது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டசில் பதிவிட்டிருந்தது சமூக வலைதளங்களில் சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் பொறுப்பு: ஊழல் தடுப்புத் துறை டிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஊழல் தடுப்புத் துறை ஐஜியாக இருந்து வரும் ஏ.டி.துரைகுமாா், கூடுதல் பொறுப்பாக அத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளாா். தோ்தல் ஆணைய உத்தரவின்படி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளாா்.
தொடர்புடையது

லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 8 எஸ்பி-க்களுக்கு மீண்டும் பொறுப்பு: தமிழக அரசு உத்தரவு

அமைச்சா் கே.என்.நேரு மீது ஏன் இன்னும் வழக்குப் பதிவு செய்யவில்லை? ஊழல் தடுப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

காத்திருப்போா் பட்டியலில் இருந்த 13 ஆய்வாளா்களுக்கு மீண்டும் பணி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


