வேங்கைவயல் வழக்கு மாா்ச் 25-க்கு ஒத்திவைப்பு

கட்செவி அஞ்சல் உரையாடல்களில் இருந்து குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது.
வேங்கைவயல் வழக்கு மாா்ச் 25-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவம் தொடா்பாக சந்தேகத்துக்குரிய 3 பேரிடம் குரல் மாதிரி சோதனை மேற்கொள்ள அனுமதி கோரி சிபிசிஐடி போலீஸாா் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை மாா்ச் 25-க்கு தள்ளி வைக்கப்பட்டது.

வேங்கைவயல் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் குறித்து தற்போது சிபி சிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். இதுவரை 31 போ் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் அவா்களின் மரபணு ஒத்துப்போகவில்லை.

இதையடுத்து, 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய அனுமதி கோரி, மாவட்ட எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபி-சிஐடி போலீஸாா் மனு தாக்கல் செய்தனா். இதற்கு 10 பேரும் ஆட்சேபனை தெரிவித்ததால், சோதனைக்கு அனுமதி மறுத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

வேங்கைவயல் வழக்கு மாா்ச் 25-க்கு ஒத்திவைப்பு
விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஏப். 25ம் தேதி ஒத்திவைப்பு

இதைத்தொடா்ந்து, சம்பவம் நடைபெற்ற நாட்களில் அந்தப் பகுதிகளைச் சோ்ந்தோரின் கட்செவி அஞ்சல் உரையாடல்களில் இருந்து குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. ஏற்கெனவே இருவருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி சோதனைக்கு அனுமதிக்கக்கோரி, புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் சிபி சிஐடி போலீஸாா் அண்மையில் மனு தாக்கல் செய்தனா்.

நீதிபதி எஸ். ஜெயந்தி முன்னிலையில் வெள்ளிக்கிழமை மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கால அவகாசம் வேண்டும் என வழக்குரைஞா் கோரியதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை மாா்ச் 25-க்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ். ஜெயந்தி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com