தூத்துக்குடி தமாகா வேட்பாளர் விஜயசீலன்


மக்களவைத் தேர்தலில் தமாகா சார்பாக தூத்துக்குடி தொகுதியில் விஜயசீலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
மக்களவைத் தோ்தலில் பாஜக கூட்டணியில் தமாகாவுக்கு ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. ஈரோட்டில் விஜயகுமாரும், ஸ்ரீபெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும் போட்டியிடுவர் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் தமாகா சார்பாக விஜயசீலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார்.
விஜயசீலம், தூத்துக்குடி தமாகாவின் தெற்கு மாவட்டத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். முன்னதாக, சைக்கிள் சின்னத்தை ஒதுக்குமாறு தோ்தல் ஆணையத்திடம் தமாகா சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று தமாகாக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...