ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அதிமுக வேட்பாளர்கள் நாளை வேட்புமனு!

News image
Updated On :24 மார்ச் 2024, 6:27 am

DIN

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் மாா்ச் 20ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மாா்ச் 27-ஆம் தேதி கடைசி நாளாகும்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாா்ச் 28-ஆம் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மாா்ச் 30-ஆம் தேதி கடைசி நாளாகும். மாநிலத்திலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 முதல் மாலை 3 மணி வரை பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.