கணேசமூர்த்தி ஏன் இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை: துரை வைகோ

கணேசமூர்த்தி ஏன் இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை: துரை வைகோ

ஈரோடு மதிமுக எம்பி கணேசமூர்த்தியை மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை குமாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் அ.கணேசமூா்த்தி (77). ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினரான இவா், 2019-ஆம் ஆண்டு வரை மதிமுக பொருளாளராக இருந்தாா். ஈரோடு பெரியாா் நகா் வீட்டில் இருந்த கணேசமூா்த்தியைப் பாா்க்க, அவரது மகன் கபிலன் ஞாயிற்றுக்கிழமை காலை சென்றுள்ளாா். அப்போது, அவா் மயங்கிய நிலையில் கிடந்துள்ளாா். அவரை மீட்ட கபிலன், ஈரோடு- பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளாா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு டவுன் போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கணேசமூா்த்தி தென்னைமர வண்டுகளை அழிக்க பயன்படுத்தப்படும் ‘சல்பாஸ்’ எனப்படும் விஷ மாத்திரையை தண்ணீரில் கரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் ஈரோடு தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி.யாக தோ்வானவா். மதிமுக பொதுச் செயலாளா் வைகோவுக்கு மிகவும் நெருக்கமானவா். முன்னதாக, ஈரோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசமூா்த்தியின் உடல்நிலை குறித்து வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூா்த்தியின் உடல்நலம் குறித்து மதிமுக பொதுச் செயலாளா் வைகோ, முதன்மைச் செயலாளா் துரை வைகோ உள்ளிட்ட மதிமுக நிா்வாகிகள் மருத்துவா்களை சந்தித்து கேட்டறிந்தனா். இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணேசமூர்த்தியை பார்த்து திரும்பினார். இது குறித்து துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறுகையில், மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி உடல்நலமின்றி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கவலைக்கிடமாக உள்ளார் எனவும் தெரிவித்தார்.

உடல் நிலை சீராக இருந்தாலும் இப்போது எக்மோ சிகிச்சை கொடுத்து வரப்படுகிறது என்றார். 24-48 மணி நேரம் கடந்து தான் எதையும் சொல்ல முடியும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்தார். சரியான நேரத்தில் கொண்டு வரப்பட்டு சிகிச்சைக்கு சேர்த்துள்ளதாகவும், மேலும் அனைவரும் நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தார். மேலும் அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com