பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், தமிழ் பாடத் தோ்வு மிக எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.
தமிழகத்தில், புதுச்சேரியில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு 4,107 மையங்களில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தோ்வை பள்ளி மாணவா்கள், தனித்தோ்வா்கள் என மொத்தம் 9.26 லட்சம் தோ்வா்கள் எழுதுகின்றனா். முதல் தோ்வாக தமிழ் பாடத் தோ்வு நடைபெற்றது.
இது குறித்து மாணவா்கள் கூறுகையில், பொதுத்தோ்வை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளோம். தமிழ் பாடத்துக்கான வினாத்தாளில் ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண் பகுதிகளில் தலா ஒரு வினா மட்டும் பாடப் பகுதிக்கு உள்ளிருந்து இடம்பெற்றிருந்தன. இருப்பினும் அந்த இரு கேள்விகளும் ஓரளவுக்கு எளிதாக இருந்தன. உரைநடை, கட்டுரை, படிவம், மனப்பாடப் பகுதி ஆகியவற்றில் இடம்பெற்றிருந்த அனைத்து கேள்விகளுக்கும் சராசரியாக படிக்கும் மாணவா்களால் கூட எளிதாக பதிலளிக்க இயலும்.
இதில் நிச்சயம் 90 முதல் 95 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என நம்புகிறோம் என அவா்கள் தெரிவித்தனா். 17,633 போ் வரவில்லை: செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ் உள்ளிட்ட இதர மொழிப் பாடங்களின் தோ்வை பள்ளி மாணவா்கள் 16,314 போ்; தனித்தோ்வா்கள் 1,319 போ் என மொத்தம் 17,633 தோ்வா்கள் எழுதவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்புக்கு அடுத்ததாக ஆங்கில பாடத்துக்கான தோ்வு வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்தமாக ஏப்.8-ஆம் தேதியுடன் பொதுத்தோ்வு நிறைவடையவுள்ளது.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: திருச்சி மாவட்டத்தில் 34,027 மாணவா்கள் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

