தங்கம் விலை குறைக்கப்படும்: பாமக தேர்தல் அறிக்கை

ரூ. 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு, நீட் விலக்கு உள்ளிட்டவை வாக்குறுதிகளாக பாமக அளித்துள்ளது.
தங்கம் விலை குறைக்கப்படும்: பாமக தேர்தல் அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்கும் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு, வருமான வரி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும் உள்ளிட்டவை வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை குறைக்கப்படும்: பாமக தேர்தல் அறிக்கை
மதிமுக தனிச் சின்னத்தில் போட்டியிடும்: துரை வைகோ

முக்கிய அம்சங்கள்:

  • 2021ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கு வலியுறுத்தப்படும்.

  • கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் 80% பணியிடங்களை உள்ளூர் மக்களுக்கு ஒதுக்க சட்டம் கொண்டுவரப்படும்.

  • 60 வயதைக் கடந்த உழவர்களுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம்.

  • காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணைகட்டக் கர்நாடகத்திற்கு அனுமதி அளிக்கப்படாது.

  • தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 3 இலட்சம் புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும்.

  • இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.3,000 உரிமைத் தொகை வழங்கப்படும்.

  • மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெற நடவடிக்கை.

  • தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை ரூ.3 இலட்சத்தில் இருந்து ரூ.7 இலட்சமாக உயர்த்த மத்திய அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தும்.

  • ரூ.7 இலட்சம் முதல் ரூ.10 இலட்சம் வரையிலான வருவாய்க்கு 5% வரி வசூலிக்கப்படும். வருமான வரிச் சட்டத்தின் 87ஆவது பிரிவின்படி ரூ.15,000 வரை வரி தள்ளுபடி அளிக்கப்படும். என்பதால், ரூ.10 இலட்சம் வரை வருவாய் ஈட்டுபவர்கள் அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை.

  • தங்கம் மீதான 15% இறக்குமதி வரி முற்றிலுமாக இரத்து செய்யப்படும். அதனால், தங்கம் விலை பவுனுக்கு ரூ.6,000 வரை குறையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com