கோப்புப் படம்
கோப்புப் படம்

மூலதன ஆதாயக் கணக்குத் திட்டம்: கேவிபி அறிமுகம்

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி) மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Published on

தனியாா் துறையைச் சோ்ந்த கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி) மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சொத்து, நிலம் அல்லது பத்திரங்கள் போன்றவற்றை விற்றவா்கள் தங்கள் வருமானத்தை பாதுகாப்பாக இருப்பு வைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட மூலதன ஆதாயக் கணக்குத் திட்டத்தை வங்கி தொடங்கியுள்ளது.

இந்தக் கணக்கில் நிதியை முதலீடு செய்வதன் மூலம், 1961 வருமான வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கு பெற தகுதி கிடைக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வீடு, நிலம், பங்குகள் போன்ற சொத்துகளை விற்பதால் கிடைக்கும் நீண்ட கால ஆதாயத்துக்கு வரி விலக்கு பெற, வருமான வரிச் சட்டப் பிரிவு 54, 54எஃப், 54பி, 54டி, 54ஜி, 54ஜிஏ போன்றவற்றின் கீழ் அதை புதிய சொத்தில் மறு முதலீடு செய்ய வேண்டும். ஆனால் வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யும் தேதிக்குள் (பொதுவாக ஜூலை 31) அவ்வாறு மறு முதலீடு செய்ய முடியாவிட்டால், அந்த ஆதாயத் தொகைக்கு வரி விதிக்கப்படும். எனினும், அதை மூலதன ஆதாயக் கணக்கில் செலுத்தினால் அதற்கு 2 முதல் 3 ஆண்டுகள் வரை வரி விலக்கு கிடைக்கும். அதற்குள் அந்த ஆதாயத்தை மறு முதலீடு செய்தால் போதும்.

Dinamani
www.dinamani.com