47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி மறைவு: வைகோ இரங்கல்

மதிமுக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும்,ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி (77)வியாழக்கிழமை அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார்.

News image
Updated On :28 மார்ச் 2024, 6:52 am

DIN

மதிமுக நிறுவனத் தலைவர்களில் ஒருவரும்,ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி (77) வியாழக்கிழமை அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி உயிர் பிழைத்துக்கொள்வார் என்ற நம்பிக்கையில்தான் நான் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு வந்தேன். ஆனால் முடிவுகள் வேறாகிவிட்டன.

கல்லூரி காலம் தொட்டு கொள்கை உணர்வோடு பழகி என்னோடு பயணம் செய்த ஆருயிர் சகோதரரை, மதிமுகவின் கொங்குச் சீமையின் கொள்கைக் காவலரை இழந்த பெரும் துயரில் கண்ணீர் வடிக்கிறேன். ஆறாத் துயரமும், அளவிட முடியா வேதனையும் அடைந்தேன்.

கடந்த முறை மக்களவை உறுப்பினராக பொறுப்பேற்ற போது, "தமிழ்நாடே என் தாய்நாடு" என்று முழக்கமிட்டு பதவி ஏற்ற நிகழ்வு நம் நெஞ்சில் என்றும் நிலைத்திருக்கும்.

அவரது பிரிவால் கண்ணீரில் தத்தளிக்கும் குடும்பத்தினருக்கும், அவரது நண்பர்களுக்கும், மதிமுக கண்ணின் மணிகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.