அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!தவெகவும் திமுகவும் ஏன் ஒரே அணியில் வரக்கூடாது? திருமாவளவன்விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! நச்சென்று நான்கு மாற்றங்கள்!
/

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி காலமானார்

News image

கணேசமூா்த்தி

Updated On :28 மார்ச் 2024, 6:07 am IST

கோவை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக ஈரோடு எம்.பி. கணேசமூா்த்தி சிகிச்சை பலனின்றி வியாழன் அதிகாலை காலமானார்.

திடீா் உடல் நலக்குறைவு காரணமாக கோவை தனியாா் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா் அனுமதிக்கப்பட்டாா்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 72 மணி நேர தீவிர கண்காணிப்பில் இருந்த கணேசமூா்த்தி வியாழன் அதிகாலை 5.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவு கட்சி தொண்டர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணேசமூா்த்தி விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அது தொடா்பாக ஈரோடு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே மதிமுக பொதுச்செயலாளா் வைகோ சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வருகின்றாா். உடனடியாக மருத்துவமனைக்கு அவா் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.