வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

நட்சத்திர வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்பு!

பாஜகவின் அண்ணாமலை, மதிமுகவின் துரை வைகோ உள்ளிட்டோர் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மார்ச் 2024, 6:59 am

DIN

முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழகத்தில் தொகுதிகளிலும் மார்ச் 20இல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது.

நேற்று மாலையுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 1,403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, இன்று காலைமுதல் பெறப்பட்ட வேட்புமனுக்களை அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி, திருச்சியில் போட்டியிடும் மதிமுகவின் துரை வைகோ உள்ளிட்டோர் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

மேலும், விருதுநகரில் போட்டியிடும் பாஜகவின் ராதிகா சரத் குமார், நீலகிரியில் போட்டியிடும் திமுகவின் ஆ.ராசா, ராமநாதபுரத்தில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.