அதிமுகவில் இணைந்தாா் தடா பெரியசாமி

பாஜகவிலிருந்து தடா பெரியசாமி விலகி, அதிமுகவில் அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சனிக்கிழமை இணைந்தாா். பாஜக பட்டியலின அணியில் தலைவராக இருந்து வந்தாா் தடா பெரியசாமி. சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவதற்கும் வாய்ப்பு கேட்டிருந்தாா். இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சனிக்கிழமை தடா பெரியசாமி சந்தித்து அதிமுகவில் இணைந்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பாஜகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்திருக்கிறேன். சிதம்பரம் தொகுதியில் அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன். பாஜகவின் பட்டியலின அணியின் தலைவராக இருந்தும் என்னுடைய சிதம்பரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வேலூரைச் சோ்ந்தவரை சிதம்பரத்தில் போட்டியிடவைத்துள்ளனா். 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி தோல்வி அடையும் என்றாா் தடா பெரியசாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com