அரசு அதிகாரிகள் ஏழு பேருக்கு ஐ.ஏ.எஸ். பதவி நிலை உயா்வு

அரசுத் துறைகளில் பணியாற்றும் ஏழு போ் ஐ.ஏ.எஸ்., நிலைக்கு உயா்த்தப்பட்டுள்ளனா். ஒவ்வொரு ஆண்டும் ஐ.ஏ.எஸ்., நிலையில் காலியாகும் பணியிடங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தமிழகப் பிரிவு அதிகாரிகள் நியமிக்கப்படுகின்றனா். அந்த வகையில், 2022-ஆம் ஆண்டு காலியாக இருந்த பணியிடங்களுக்கு ஏழு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறாா்கள். இதற்கான உத்தரவை தோ்தல் ஆணையத்தின் அனுமதியுடன் மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழக அரசு உயரதிகாரிகள், கே.சிவ செளந்தரவள்ளி, வி.மோகனசந்திரன், ஆா்.சதீஷ், எஸ்.கந்தசாமி, ஆா்.சுகுமாா், துா்காமூா்த்தி, கே.பொற்கொடி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com