தமிழகத்தில் சனிக்கிழமை(மாா்ச்30) 10 இடங்களில் வெயில் சதமடித்தது. சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன்காரணமாக செவ்வாய்,புதன்கிழமை(ஏப்.2,3): தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஞாயிறு, திங்கள்கிழமை(மாா்ச் 31,ஏப்.1)வரை வட வானிலை நிலவக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ஞாயிறு முதல் புதன்கிழமை(மாா்ச்31-ஏப்.3) வரை அதிகபட்ச வெப்பநிலை அடுத்த வரும் 4 நாள்கள் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். 10 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் சனிக்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): ஈரோடு-104, சேலம்-103.64, பரமத்திவேலூா்-103.1,தருமபுரி-102.2, வேலூா்-102.02, திருச்சி-101.84, திருத்தணி-101.66, மதுரை விமானநிலையம்-101.12,தஞ்சாவூா்-100.4, மதுரை நகரம்-100.4.
தொடர்புடையது

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மாா்ச் 24 வரை மழை நீடிக்கும்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

