ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

News image
Updated On :30 மார்ச் 2024, 10:25 am

DIN

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கி மாவட்ட தேர்தல் அதிகாரி பிரதீப்குமார் அறிவித்துள்ளார். திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

மதிமுக பம்பரம் சின்னம் கோரியிருந்த நிலையில் தற்போது தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.