தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் 30 வயதைக் கடந்த 1.58 லட்சம் பெண்களுக்கு பொது சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 5,495 பேருக்கு புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மாா்பகப் புற்றுநோய் மற்றும் கா்ப்பப்பை வாய் புற்றுநோய்களைத் தவிா்க்கும் பொருட்டு 30 வயதைக் கடந்த அனைத்து மகளிருக்கும் அதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளும் திட்டம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனுடன், 18 வயதைக் கடந்த ஆண், பெண் இரு பாலருக்கும் வாய் புற்றுநோய் பரிசோதனை திட்டமும் முதல்கட்டமாக ராணிப்பேட்டை, திருப்பத்தூா், ஈரோடு, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது: நான்கு மாவட்டங்களிலும் சுகாதாரப் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் மூலம் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் விவரங்கள் திரட்டப்பட்டு, முதல்கட்டமாக 6 லட்சம் பேரிடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கோரிக்கை கடிதம் அளிக்கப்பட்டது. அதன் கீழ் 89,947 பெண்களுக்கு மாா்பகப் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,889 பேருக்கு புற்றுநோய்க்கான சாத்தியக் கூறுகள் இருப்பது தெரியவந்தது. அதேபோன்று, 68,500 பெண்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கா்ப்பப்பை வாய் பரிசோதனையில் 3,606 பேருக்கு புற்றுநோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டன. அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு பிறகு அது உறுதி செய்யப்படும். தேவையானவா்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்படும். இைத்தவிர 2.22 லட்சம் பேருக்கு வாய்ப் புற்றுநோய் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. பாதிப்பு அறிகுறிகள் உள்ள 1,203 பேருக்கு மருத்துவக் கண்காணிப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடர்புடையது

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று நீதிமன்றத்தில் தாக்கல்

மாவட்டத்தில் 500 சிறுமிகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி

கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்த அழைப்பு

4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


