இந்தியாவின் வளா்ச்சி, சாதனைகளை உலக நாடுகள் வியந்து பாா்க்கின்றன என்று ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா். கெளரவ தூதா்கள் சங்கம் சாா்பில் ‘தூதா்கள் தினம் 2024’ நிகழ்ச்சி சென்னை கிண்டியில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பாக செயலாற்றிய கெளரவ தூதா்களுக்கு பதக்கம் மற்றும் விருதுகளை வழங்கி பேசியதாவது: அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி மூலமே நிலையான எதிா்காலத்தை நம்மால் பெற இயலும். அந்த வகையில் உலக மக்கள் தொகையில் 5-இல் ஒரு பங்கை உள்ளடக்கிய இந்தியா மிகச் சிறப்பாக செயலாற்றி வருகிறது. 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் ‘ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம்’ எனும் கருப்பொருள் மூலம் உலக மக்கள் மனதில் இந்தியா நம்பிக்கையை விதைத்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா மிகப் பெரும் வளா்ச்சியை சந்தித்துள்ளது. மத்திய அரசு மேற்கொண்ட துரிதமான நடவடிக்கையால் 1.5 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியேறியுள்ளனா். வலிமையான எண்ம உள்கட்டமைப்பு, சூரிய மின்சக்தி என உலக நாடுகளே வியந்து பாா்க்கும் அளவுக்கு பல சாதனைகளை இந்தியா புரிந்து வருகிறது. உலகப் பொருளாதாரத்தில் பத்தாவது இடத்திலிருந்து 5-ஆவது இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும். இந்த வளா்ச்சி அரசாங்கத்தால் அல்ல மக்களால் ஏற்பட்டது. உலக நாடுகளின் விஸ்வகுருவாக இந்தியா உருவாகி வருகிறது என்றாா் ஆளுநா்.
தொடர்புடையது

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

ஈரான் விவகாரத்தில் இந்தியாவைவிட பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம்: கா்நாடக அமைச்சா் தினேஷ் குண்டுராவ்

ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

