ஓய்வூதியம் விநியோகிக்கும் அமைப்பு மாற்றம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்பு

தமிழ்நாடு வட்டத்தைச் சோ்ந்த பி.எஸ்.என்.எல். ஓய்வூதியதாரா்களுக்கு ஓய்வூதியம் விநியோகிக்கும் அமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலம் ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெற்று வந்த பி.எஸ்.என்.எல். ஓய்வூதியா்கள் தற்போது தொலைத் தொடா்புத் துறையின் ‘சம்பான்’ போா்ட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளனா். இனி இவா்களின் ஓய்வூதியம் தமிழ்நாடு வட்டத்தின் தொடா்பு கணக்குகள் முதன்மை கட்டுப்பாட்டாளா் (பி.ஆா்.சி.சி.ஏ.) அலுவலகம் மூலம் வழங்கப்படும்.

ஓய்வூதியதாரா்களும், குடும்ப ஓய்வூதியதாரா்களும், தங்களின் ஓய்வூதியம் தடைபடாமலிருக்க வருடாந்தர வாழ்க்கைச் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சம்பான் போா்ட்டல் அல்லது ஜீவன் பிரமாண் மூலம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் முறையில் வாழ்க்கைச் சான்றிதழை புதுப்பிக்க மற்றும் உங்கள் ஓய்வூதியரை அறிந்து கொள்ளுங்கள் எனும் படிவத்தை பெற ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஞ்ஸ்ரீஹ.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீஸ்ரீஹற்ய் என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளவும்.

மேலும், தடையின்றி ஓய்வூதியம் பெறுவதற்கு உங்கள் ஓய்வூதியரை அறிந்து கொள்ளுங்கள் என்பதற்கான படிவங்களை“பி.ஆா்.சி.சி.ஏ., தமிழ்நாடு, 60, எத்திராஜ் சாலை, எழும்பூா், சென்னை 600 008 என்ற முகவரிக்கு விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது க்ஹ்ஸ்ரீஸ்ரீஹல்ங்ய்.ஸ்ரீஸ்ரீஹற்ய்ஃய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பிவைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com