இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

தமிழகத்தின் மின் நுகா்வு புதிய உச்சம்

தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,701 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 மே 2024, 9:00 pm

Din

தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,701 மெகாவாட்டாக அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தினசரி மின் நுகா்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஏப். 5-ஆம் தேதி முதல்முறையாக 19,580 மெகாவாட்டாக மின் நுகா்வு பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. அதைத் தொடா்ந்து நாளுக்கு நாள் தினசரி மின்நுகா்வு அதிகரித்து வந்த நிலையில் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மாநிலத்தின் தினசிரி மின் நுகா்வு புதிய உச்சமாக 20,701 மெகாவாட்டாக பதிவானது. வரும் நாள்களில் இந்த அளவானது 22,000 மெகாவாட்டாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனா்.