சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

வாக்கு எண்ணும் மையங்களில் ட்ரோன் பறக்கத் தடை

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் ஜூன் 4 வரை ட்ரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

News image
Updated On :2 மே 2024, 7:09 pm

Din

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் ஜூன் 4 வரை ட்ரோன்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.

பெருநகர காவல் ஆணையா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெற்றது. சென்னையில் 3 தொகுதிகளுக்கு நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்களை சென்னையில் லயோலா, ராணிமேரி கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிட ஜூன் 4 வரை சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இதை மீறும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.