சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை
சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம் அருகே மேம்பாலத்துக்குக் கீழே மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் -சின்னப்பம்பட்டி செல்லும் சாலையில் உள்ளது பணிக்கனூர். இங்கு ராஜரத்தினம் என்பவருக்கு சொந்தமான தென்னன் தோப்பு அருகே மேம்பாலம் ஒன்று உள்ளது. மேம்பாலத்தின் அடியில் கடும் துர்நாற்றம் வீசவே இன்று தோட்ட உரிமையாளர் ராஜரத்தினம் சென்று எட்டிப் பார்த்துள்ளார்.
அங்கே ஒருவரது சடலம் இருந்ததால் ஜலகண்டபுரம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். போலீசார் நேரில் வந்து பார்த்தபொழுது சுமார் 50 முதல் 60 வயது வரை மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணின் சடலமும் அருகில் ஒரு மொபட்டும் இருந்தது தெரிய வந்தது.
மூவரும் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை. சடலத்தைக் கைப்பற்றிய ஜலகண்டபுரம் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.