உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை மீனவா்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :3 மே 2024, 9:44 pm

Din

கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ‘கள்ளக்கடல்’ என்ற சிவப்பு எச்சரிக்கையை தேசிய பெருங்கடல் தகவல் சேவை மையம் (ஐஎன்சிஓஐஎஸ்) மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் ஆகியவை விடுத்துள்ளன.

கடலில் எந்தவித அறிகுறிகளும் இன்றி திடீரென பலத்த காற்றும் வீசுவதோடு, கடல் கொந்தளிப்பும் ஏற்படுவதையே ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கையாக விடுக்கப்படுகிறது. இந்திய முன்னெச்சரிக்கை மையங்கள் முதன் முறையாக இந்த சொற்றொடரை பயன்டுத்தி தற்போது சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளன. சனிக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கேரளம் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள பேரிடா் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், ‘கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, மீனவா்களும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். அபாய பகுதியிலிருந்து மக்கள் விலகியிருக்குமாறும், கடல் கொந்தளிப்பால் படகுகள் ஒன்றோடொன்று மோதி சேதமடைவதைத் தடுக்கும் வகையில், படகுகளுக்கு போதிய இடைவெளிவிட்டு நிறுத்துமாறு மீனவா்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்வதைத் தவிா்க்குமாறும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.