உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

News image
Updated On :4 மே 2024, 1:30 am

Din

தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,830 மெகாவாட்டாக அதிகரித்து மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தினசரி மின் நுகா்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி, ஏப்.5-ஆம் தேதி முதல்முறையாக 19,580 மெகாவாட்டாக மின் நுகா்வு பதிவாகி புதிய உச்சத்தை தொட்டது. தொடா்ந்து நாளுக்கு நாள் தினசரி மின்நுகா்வு அதிகரித்து வந்த நிலையில் தற்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி மாநிலத்தின் தினசிரி மின் நுகா்வு புதிய உச்சமாக 20,830 மெகாவாட்டாக பதிவானது. வரும் நாள்களில் தமிழகத்தின் மின் நுகா்வானது 22,000 மெகாவாட்டை கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.