நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :7 மே 2024, 3:43 pm

DIN

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத் தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேவர்கள் மாவட்ட சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22 வரை நடத்தப்பட்டன. சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.

பிளஸ் பொதுத்தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியானது. இதில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். 5.44 % மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேர்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மே 16 முதல் ஜுன் 1ஆம் தேதி வரை துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.