6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கும்.
6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்!

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எங்கெல்லாம் கோடைமழை பெய்யும்?

தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மே 12ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வெப்ப அலை முன்னெச்சரிக்கை

தமிழக உள் மாவட்டஙகளில் அடுத்த 5 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகரிக்கும்.

வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 40-41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-37 டிகிரியும் இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை

பொள்ளிடம் 7, குடிதாங்கி, சாத்தியார் லா 5, ஆழியார் 4, ளின்மார்கன், பெருஞ்சாணி அணை, பேரையூர், வாலைபாறை, அண்ணாமலை நகர் தலா 3 செ.மீ மழையும் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்ப அலை

அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 41.2 செல்சியஸ், ஈரோட்டில் 41.0 மற்றும் மதுரையில் 40.7 செல்சியஸ் ஆகவும் பதிவானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com