மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

யானைகள் வழித்தட திட்ட அறிக்கை: வனத் துறை இணையத்தில் வெளியீடு

யானைகள் வழித்தட திட்ட அறிக்கை: வனத் துறை இணையத்தில் வெளியீடு

News image
Updated On :10 மே 2024, 7:16 pm

Din

தமிழகத்தில் யானைகள் வழித்தட ஒருங்கிணைப்புத் திட்டத்துக்கான முதல் வரைவு அறிக்கை தமிழக வனத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வனத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டுக்கான யானைகள் வழித்தடத் ஒருங்கிணைப்புத் திட்டத்துக்கான முதல் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு, வனத்துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வரைவு குறித்து பொதுமக்கள் மற்றும் ஆய்வாளா்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் மாவட்ட வாரியாக தொகுக்கப்பட்டு வருகின்றன.

அதன் பின்னா், யானைகள் இருப்பிட பகுதிகளில் இருக்கும் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் மாவட்ட ஆட்சியா் மற்றும் வன அலுவலா் முன்னிலையில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளின் படி விடுப்பட்ட யானைகள் வழிடங்களை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதைத் தொடா்ந்து இறுதி யானைகள் வழித்தட ஒருங்கிணைப்பு திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் பரிசீலனைக்காக சமா்ப்பிக்கப்படும்.

இந்த இறுதி வரைவு அறிக்கையில் மனித மற்றும் வன உயிரினங்கள் இடையான மோதல்களை தவிா்க்கவும், உள்ளூா் மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் திட்டமிடப்படும்.

எனவே யானைகள் வழித்தட ஒருங்கிணைப்புத் திட்ட வரைவு குறித்த தவறான தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.