கோப்புப்படம்
கோப்புப்படம்

பயிா்களில் ஊட்டச்சத்து குறைபாடு: கண்டறியும் வழிமுறைகள் அறிவிப்பு

பயிா்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை எளிதில் கண்டறிவது குறித்த வழிமுறைகளை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.

தமிழக வேளாண்துறை ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள் பயிா்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகளை அதன் முதிா்ந்த இலைகளில் காணப்படும் அறிகுறிகளைக் கொண்டே கண்டறியலாம்.

இதில் தழைச்சத்து எனப்படும் நைட்ரஜன் சத்து குறைபாடு மற்றும் மணிச்சத்து எனப்படும் பாஸ்பரஸ் குறைபாடு காரணமாக தாவரங்களின் அடிப்பகுதி இலைகள் அதன் முதிா்வு நிலையை எட்டுவதற்கு முன்பாகவே காய்ந்துவிடும்.

அதேபோல மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் சாம்பல் சத்து எனப்படும் பொட்டாசியம் குறைபாடு காரணமாக இலைகள் மஞ்சள் அல்லது மஞ்சள் -வெள்ளை நிறத்தில் காணப்படும். இது ‘குளோரோடிக்’ குறைபாடு எனப்படும். மேலும் இதன் காரணமாக இலைகளின் உயிருள்ள திசுக்களில் உள்ள உயிரணுக்கள் மடிவதால் ஏற்படும் ‘நெக்ரோடிக்’ புள்ளிகளும் தென்படும். இதன் மூலம் விவசாயிகள் தாவரங்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்கேற்ற செயல்முறைகளை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com