70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது 70 ஆவது பிறந்த நாளையொட்டி 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.
70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது 70 ஆவது பிறந்த நாளையொட்டி 70 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.

சேலம் திருவாக்கவுண்டனூரில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி கேக் வெட்டி கொண்டாடினார்.

எடப்பாடி கே பழனிச்சாமிக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் சமூக ஊடகங்களில் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஜ்ய்யின் எக்ஸ் தளப் பதிவில், “அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.” என்று தெரிவித்தார்.

70வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடிய இபிஎஸ்... விஜய், அண்ணாமலை வாழ்த்து!
ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழக முன்னாள் முதலமைச்சரும் அஇஅதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணி தொடர வேண்டிக் கொள்கிறேன்.” எனத் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com