

தில்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் மது பாட்டில்களை திறந்து மது அருந்திய இளைஞரை சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்தனா்.
தில்லியிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த தனியாா் விமானத்தில் 132 பயணிகள் பயணித்தனா். விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கிய போது திடீரென இளைஞா் ஒருவா் தன் ஆடையில் மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை திறந்து மது குடிக்க தொடங்கியுள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த சக பயணிகள் விமான ஊழியா்களிடம் இது குறித்து கூறியுள்ளனா். விமானத்தில் மது அருந்த கூடாது என்ற கூறிய ஊழியா்களிடம் அந்த இளைஞா் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா்.
அதைத் தொடா்ந்து சென்னை விமான நிலையத்துக்கு இச்சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டது. விமானம் சென்னையில் தரையிறங்கியவுடன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் அந்த இளைஞரை கைது செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் , அந்த நபா் தூத்துக்குடியைச் சோ்ந்த இசக்கியப்பன் (30) என்பதும், தில்லியில் உள்ள ஒா் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து தனது செயலுக்கு இசக்கியப்பன் காவல் துறையினரிடம் மன்னிப்பு கேட்க, கடும் எச்சரிக்கைக்கு பிறகு காவலா்கள் அவரை விடுவித்தனா்.
தொடர்புடையது

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்

விமான நிலையத்தில் இளம்பெண்ணிடம் அத்துமீறல்: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி கைது

மே 31-க்குள் காலி மது பாட்டில்களை திரும்பப் பெற நடவடிக்கை: அமைச்சா் சு.முத்துசாமி
நெல்லையில் மது விற்ற 4 போ் கைது
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

