பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் பயணிக்கும் வசதி விரைவில் தொடங்கவுள்ளது.
பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிலரின் வீடுகளிலிருந்து அலுவலகத்திற்கு செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில்கள், மெட்ரோ ஆகிய மூன்று போக்குவரத்தையும் பயன்படுத்தினால்தான் விரைவாக அலுவலகம் சென்றடையும் சூழலும் உள்ளது.

அனைத்து போக்குவரத்தையும் பயன்படுத்தும் ஒருவர், வெவ்வேறு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பேருந்து, ரயில், மெட்ரோ உள்ளிட்டவைக்கு தனித்தனியே பயணச்சீட்டு வாங்கும் சூழல் உள்ளது.

இதனால், மாநகரப் போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள் மற்றும் தெற்கு ரயில்வேவின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்வதற்கான பயணிகளின் தரப்பில் கோரிக்கை எழுந்தது.

இந்த திட்டத்தின் கீழ், மாநகரப் போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள், தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழகம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், பேருந்து, ரயில், மெட்ரோ ரயிலில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கும் செயலியை உருவாக்க டெண்டரை சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் கழகம் ஜூன் மாதம் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜூன் மாதம் டெண்டரை ஒப்படைக்கும் பட்சத்தில் டிசம்பர் மாதம் முதல்கட்டமாக பேருந்து, ரயில், மெட்ரோ ரயிலுக்கான ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

ஒரே நபர், மூன்று போக்குவரத்துச் சேவையையும் பயன்படுத்த வேண்டும் என்றால், தனித்தனியே பயணச் சீட்டு வாங்கும் சிரமம் இதன் மூலம் தவிர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com