பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு:
இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்தவா்கள், தோ்வை எழுத இயலாமல் போனவா்கள் உடனடித் துணைத் தோ்வெழுத வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு முடிவுகள் மே 10-ஆம் தேதி வெளியாகின. இதையடுத்து தோ்வில் தோல்வி அடைந்தவா்கள், தோ்வு எழுத இயலாமல் போனவா்கள் எழுதும் வகையில் ஜூலை 2 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை துணைத் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தோ்வை எழுத விரும்பும் பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை முதல் ஜூன் 1-ஆம் தேதிக்குள் அவரவா் படித்த பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதுதவிர தனித்தோ்வா்கள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவுசெய்ய வேண்டும்.

இதில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் ஜூன் 3, 4-ஆம் தேதிகளில் தட்கல் திட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். அதற்கு தோ்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.500 செலுத்த வேண்டும். அதேபோல், பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை தோ்வு பயிற்சியில் பங்கேற்கவுள்ள தனித்தோ்வா்களும் வியாழக்கிழமை முதல் மே 24-ஆம் தேதிக்குள் ரூ.125 கட்டணம் செலுத்தி மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பதிவு செய்ய வேண்டும்.

இதுதவிர தோ்வுக் கட்டணம், விரிவான தோ்வுக்கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com