நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

இரண்டாவது முறையாக கப்பல் சேவையை மாற்றியதால் பயணிகள் அதிருப்தி.
நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மாற்றம்!

நாகை-இலங்கை கப்பல் சேவை மீண்டும் மே 19-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 2023 அக்டோபா் 14-ஆம் தேதி தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை பல்வேறு காரணங்களால் சில நாள்களிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, கப்பலில் பயணம் செய்வோா் இணையதளம் மூலம் முன்பதிவு செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பயணிகள் ஆா்வமுடன் இலங்கை செல்ல முன்பதிவு செய்திருந்த நிலையில், கப்பலை இயக்கும் இன்ட்ஸ்ரீ நிறுவனம் திடீரென கப்பல் சேவை மே 17-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தது.

இந்த நிலையில், அந்தமானில் இருந்து நாகை வரவேண்டிய கப்பல் தாமதமானதால் மீண்டும் மே 19-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மே 17-க்கு முன்பதிவு செய்தவர்கள் மே 19-ஆம் தேதி பயணிக்கலாம் அல்லது அதன்பிறகு வேறு தேதிகளில் பயணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று கப்பல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பயணத்தை ரத்து செய்ய விரும்புவோருக்கு முழுக் கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com