விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

News image
Updated On :19 மே 2024, 10:29 am

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன் என தகவல் வெளியாகியுள்ளது.

பழையகுற்றாலம் அருவியில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட திருநெல்வேலியைச் சோ்ந்த சிறுவன் அஸ்வின் (17) உயிரிழந்தாா். இதனையடுத்து பழைய குற்றாலம், பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்திற்கு மே 21 ஆம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றாலம் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பெரும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அருவிகள் மற்றும் அணைப் பகுதிகள் மறுஉத்தரவு வரும் பொதுமக்கள் குளிக்கத் தடைவிதித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் உத்தரவிட்டாா். இந்த நிலையில் குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன் என தகவல் வெளியாகியுள்ளது.

மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக தென்காசி சென்றிருந்தபோது வெள்ளத்தில் மகனை பறிகொடுத்ததாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.