
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் பிச்சாண்டார் கோவில் கிராமத்தில் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும் , 108 திருப்பதிகளுள் ஒன்றானதும், திருக்கரம்பனூர், ஆதிமாபுரம், என பிரசித்தி பெற்றதும், மும்மூர்த்திகள் முப்பெருந்தேவிகளுடன் எழுந்தருளியுள்ளது மாகிய திருத்தலம் அருள்மிகு உத்தமர் திருக்கோயில்.
ஈஸ்வரனின் 64 திருவிளையாடல்களில் 29 வது திருவிளையாடல் அருள்மிகு பிச்சாண்டேஸ்வரருக்கு ஆதியில் சத்கீர்த்தி வர்த்தனன் என்கிற சோழ அரசரால் ஏற்படுத்தப்பட்ட பெருந்திருவிழா வைகாசி தேர்த்திருவிழா.
வைகாசி தேர்த்திருவிழா மே 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெற்றது.
இவ்விழாவில் இன்று(மே 20) தாமரை கேடயத்தில் அருள்மிகு பிச்சாண்டேஸ்வரர் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் திருவீதி உலா கண்டருளல் நிகழ்வு நடைபெற்றது.
சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அபிஷேக மற்றும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்றது.
அப்போது அரிசி, பருப்பு உள்ளிட்டவைகள் வழங்கினர். தொடர்ந்து திருமுறை பாராயணத்தோடு கயிலாயவாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.