தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் அனைத்தும் ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பையொட்டி பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில், பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள், பிற அறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
கற்றல், கற்பித்தல் உபகரணங்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதையை சரிசெய்ய வேண்டும்.
குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் தூய்மை செய்ய வேண்டும்.
சமையலறை, சமையல் பாத்திரங்கள் தூய்மையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்திலோ அல்லது வகுப்பறைகளிலோ தேவையற்ற பயன்பாடற்ற பொருட்கள் இருப்பின் அப்புறப்படுத்த வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டிகள், மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பழுதடைந்த கட்டங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டங்களை மாணவர்கள் அணுகாத வயைல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின்சுவிட்சுகள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொழிற்பணிகளுக்கு வன நிலம்: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு
விழிப்புடன் செயல்பட வேண்டும்: திமுகவினருக்கு முதல்வா் அறிவுரை

தோ்தல் அலுவலா்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


