வன உயிரின கடத்தல் கும்பல்! ஆயுதப்படைக் காவலர் டிஸ்மிஸ்!

வன உயிரின கடத்தலில் அச்சாணியாக இருந்த ஆயுதப்படைக் காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வன உயிரின கடத்தல் கும்பல்! ஆயுதப்படைக் காவலர் டிஸ்மிஸ்!

சென்னை சுங்கத்துறை அதிகாரிகளால் சமீபத்தில் பிடிபட்ட பல கோடி சர்வதேச வெளிநாட்டு உயிரினங்கள் கடத்தல் மோசடியில் அச்சாணியாக செயல்பட்ட தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சேர்ந்த ஆயுதப்படைக் காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை ஆயுதப்படைக் காவலர் ரவிக்குமார் (41), மே 11 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பணிநீக்கம் செய்யப்பட்ட ரவிக்குமார் கடந்த 3 ஆண்டுகளில் மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார். சமீபத்தில் இவர் கடத்திய வன உயிரினங்களின் மதிப்பு சுமார் ரூ. 5 கோடி இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மர்மோசெட் குரங்குகள், சிவப்பு வால் குயினன் (குரங்கு), டெகு பல்லிகள் மற்றும் பந்து மலைப்பாம்பு வகைகள் மற்றும் ஃபெனெக் நரி ஆகிய வன உயிரினங்கள் நாட்டிற்குள் கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பட்டியலில் அயல் நாட்டு விலங்குகளும் அடங்குகிறது.

பாங்காக்கில் இருந்து வந்த பயணி முகமது முபீனிடம் இருந்து 484 சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகள் மற்றும் ஒன்பது ஆப்பிரிக்க ஆமைகளை வாங்கியதாக ரவிக்குமார் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே ஏப்ரல் 12-ல் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வன உயிரின கடத்தல் கும்பல்! ஆயுதப்படைக் காவலர் டிஸ்மிஸ்!
பாறையை உண்ணச் சொன்ன கூகுள் ‘ஏஐ’!

ரவிக்குமார், கொளத்தூரில் தனது மனைவி பெயரில் கடல்வாழ் உயிரினங்கள் விற்பனையகம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. அவர் தனது வெளிநாட்டு பயணங்களுக்கு, விதிகளின்படி, மேல் அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று செயல்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக அவர் 2022-ல் திருப்பதிக்கு அருகிலுள்ள வெங்கடகிரி வனப்பகுதியில் இந்திய நட்சத்திர ஆமைகளை சட்டவிரோதமாக வைத்திருத்தல் மற்றும் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக ஆந்திரப் பிரதேச சிறப்பு அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். வீராபுரத்தில் உள்ள ஆயுதப்படையில் டிஎஸ்பியாக இருந்த ரவிக்குமார், 2 முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வனவிலங்கு கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ரவிக்குமாரின் பங்கு குறித்து விவரமாக தமிழக காவல்துறைக்கு மத்திய நிறுவனம் கடிதம் எழுதியிருந்தது.

தற்போது ரவிக்குமார் ஜாமீனில் உள்ளார், மேலும் அவர் மீதான வழக்கை சுங்கம் மற்றும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டுப் பணியகம் (WCCB) விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com