முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்குகள்: விசாரணை ஒத்திவைப்பு
விழுப்புரம் நீதிமன்றம்: சி.வி. சண்முகம் அவதூறு வழக்குகள் மீதான விசாரணை ஒத்திவைப்பு


முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2022, பிப்ரவரி 28-ஆம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகிலும், 2022, ஜூலை 25-
ஆம் தேதி பழைய பேருந்து நிலையம் அருகிலும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் அவதூறாக பேசியதாக, விழுப்புரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1-வழக்குத் தொடுக்கப்பட்டது.
இதுபோன்ற 2022, செப்டம்பர் 18-ஆம் தேதி திருச்சிற்றம்பலம் கூட்டுச்சாலையில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்திலும் அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ. சக்கரபாணி ஆகியோர் மீது அவதூறு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்குகள் விசாரணையில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மட்டும் ஆஜராகினார். இந்த வழக்குகளை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அதிமுக வழக்குரைஞர்கள் கூறியதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூன் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ராதிகா உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...