சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
Updated on
1 min read

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபா் சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 30-ஆம் தேதிக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தேனி அருகேயுள்ள பூதிப்புரம் பகுதியில் தனியாா் விடுதியில் சவுக்கு சங்கா் தங்கியிருந்தாா். கடந்த 4-ஆம் தேதி அந்த விடுதிக்குச் சென்ற கோவை இணையக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா், பெண் போலீஸாரை அவதூறாகப் பேசியதாக அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

அப்போது, தேனி பழனிசெட்டிபட்டி போலீஸாா், அந்த விடுதியில் வைக்கப்பட்டிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, சவுக்கு சங்கா் மீது வழக்குப் பதிந்தனா்.

சவுக்கு சங்கர் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு
‘மாயி' பட இயக்குநர் சூரிய பிரகாஷ் காலமானார்

அவருடன் தங்கியிருந்த பரமக்குடியைச் சோ்ந்த உதவியாளா் ராஜரத்தினம், காா் ஓட்டுநா் ராம்பிரபு ஆகியோரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். சவுக்கு சங்கருக்கு கஞ்சா விற்பனை செய்ததாக கமுதி பகுதியைச் சோ்ந்த மகேந்திரனை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், சவுக்கு சங்கா் ஜாமீன் வழங்கக் கோரி, மதுரை போதைப் பொருள் தடுப்பு முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். ஏற்கெனவே இந்த மனு மீதான விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மே 30ஆம் தேதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com