ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜூன் 1-ல் திமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கூட்டம்

நாடு முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.

News image
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
Updated On :28 மே 2024, 6:31 am

DIN

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, ”ஜூன் 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் காணொலி வாயிலாக திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தலைமை முகவர்கள், வாக்கு எண்ணிக்கை முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில், திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டியவை குறித்து ஆலோசனை வழங்குவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.