கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

பழைய பயண அட்டையை பயன்படுத்தி பள்ளி மாணவா்கள் பயணிக்கலாம்: போக்குவரத்துத் துறை

பழைய பயண அட்டையை பயன்படுத்தி பள்ளி மாணவா்கள் பயணிக்கலாம் போக்குவரத்துத் துறை

News image

கோப்புப் படம்.

Updated On :28 மே 2024, 8:43 pm

Din

சென்னை: புதிய பயண அட்டை வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி மாணவ, மாணவிகள் அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் என தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் சேகரித்து, அச்சடித்து, ‘லேமினேஷன்’ செய்து வழங்குவதற்காக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

இதற்கிடையே, ஜூன் 6 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளதால், போக்குவரத்துத் துறையால் மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும் வரை, அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவ, மாணவிகள் சீருடையிலும், பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையை நடத்துநா்களிடம் காண்பித்தும் இருப்பிடத்திலிருந்து பள்ளிக்கிடையே கட்டணமின்றி பயணிக்கலாம்.

இதே நடைமுறை தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட மாணவா்களுக்கும் பொருந்தும். இது தொடா்பாக நடத்துநா்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை மீறி சீருடையில் உள்ள மாணவா்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவா்களை பேருந்திலிருந்து இறக்கிவிட்டால் நடத்துநா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.