கொளுத்தும் வெயிலுக்கு இடையே எங்கெல்லாம் கனமழை பெய்யும்?
நாளை எந்தெந்த மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்பதைத் தெரிந்துகொள்வோம்.


தமிழகத்தில் நாளை(ஜூன் 1) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கோடைவெயில் சுட்டெரித்துவரும் நிலையில், நாளை கனமழை பெய்யும் என ஐஎம்டி கணித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை, தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன்காரணமாக, இன்று(மே 31) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 1ல் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள்(ஜூன் 2)ல் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை முன்னறிவிப்பு..
தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும், தமிழ்நாட்டின் இதர பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையை பொருத்தவரை... அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்கள்.. இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை..
திருப்பத்தூர் தலா 4, அரக்கோணம் 1, அம்முண்டி 1, விரிஞ்சிபுரம் தலா 1 செ.மீ அளவும் மழை பதிவாகின.
அதிகபட்ச வெப்பநிலை..
திருத்தணியில் 42.5 செல்சியஸாகவும், மீனம்பாக்கத்தில் 41.9, புதுவை மற்றும் காரைக்காலில் 37 - 40 டிகிரி செல்சியஸ் பதிவானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...