கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

100 % இடஒதுக்கீடு வழங்கப்படும் நாளே சமூகநீதி நாள்: ராமதாஸ்

தமிழகத்தில் 100 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நாளே உண்மையான சமூகநீதி நாள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்

News image
பாமக நிறுவனா் ராமதாஸ் - Center-Center-Chennai
Updated On :4 நவம்பர் 2024, 10:41 pm

DIN

சென்னை: தமிழகத்தில் 100 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் நாளே உண்மையான சமூகநீதி நாள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்

இது தொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சென்னை மாகாணத்தில் அனைத்து சமூகத்தினருக்கும் 100 சதவீத இடப்பங்கீடு வழங்குவதற்கான 1070 என்ற எண் கொண்ட சமூக அரசாணை 97 ஆண்டுகளுக்கு முன் சுப்பராயன் தலைமையிலான அரசில், கல்வித் துறை அமைச்சராக இருந்த முத்தையாவால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட நாள் இது. ஆனால், இன்று சமூகநீதியை அளிக்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. சுயநலத்தாலும், அக்கறையின்மையாலும் அந்த முயற்சிக்கு தமிழக அரசும் துணை போய்க்கொண்டிருக்கிறது.

வன்னியா்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் ஆணையிட்டு 950 நாள்கள் ஆகும் நிலையில், அதற்காக திமுக அரசு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. சமூகநீதி போா்வை போற்றி, சமூக அநீதிக்கு சாமரம் வீசும் ஆட்சியாளா்களுக்கு பாட்டாளி மக்கள் கண்டிப்பாக பாடம் புகட்டுவா்.

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இன்னும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படாத சமுதாயங்கள் ஏராளமான உள்ளன. ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி அவா்கள் அனைவருக்கும் மக்கள்தொகைக்கு இணையான இடப்பங்கீடு வழங்கி, தமிழகத்தில் 100 சதவீத இடப்பங்கீடு நடைமுறைப்படுத்தப்படும் நாள் தான் உண்மையான சமூகநீதி நாள் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.