கோவை நூலகத்துக்கு பெரியார் பெயர்: மு.க. ஸ்டாலின்

கோவையில் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்
அடிக்கல் நாட்டு விழாவில் உரையாற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின்DIPR
Published on
Updated on
1 min read

கோவையில் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

பள்ளிக் கல்வித் துறை சார்பில் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பளவில் அமையவுள்ள மாபெரும் நூலகம் - அறிவியல் மையத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதனைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

’’தடைகளை உடைத்து கோவைக்காக சிறப்பாக செயல்படுபவர் செந்தில் பாலாஜி.

கடந்த காலத்தில் சிறப்பாக செயல்பட்ட செந்தில் பாலாஜிக்கு இடையில் சில தடைகளை ஏற்படுத்தினர்.

கோவையில் அடிக்கல் நாட்டப்பட்ட நூலகத்துக்கு பெரியார் பெயர் வைக்கப்படும் . 2026 ஜனவரி மாதம் பெரியார் நூலகம் திறந்துவைக்கப்படும்.

சென்னையில் அண்ணா நூலகம், மதுரையில் கலைஞர் நூலகம் இருப்பதைப் போன்று கோவையில் பெரியார் நூலகம் அமையும்.

தங்கநகை தயாரிப்பாளர்களுக்கு ரூ. 126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் வளாகம் அமைத்துத்தரப்படும்.

தங்க நகை தயாரிப்பாளர்களின் கோரிக்கையை கேட்டப்பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகிறேன். தங்க நகை தொழில் வளாகம் அமைப்பதன் மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கோவையில் மேலும் ஒரு ஐடி பூங்கா

கோவையில் 17 ஏக்கரில் மேலும் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

கோவையில் விளை நிலங்களில் யானை புகாதவாறு நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய வேலிகள் அமைத்துத்தரப்படும்.

யானை புகாத நவீன பாதுகாப்பு வேலிகளுடன் கூடிய ரயில்வே மேம்பாலம் ரூ.7 கோடியில் அமைக்கப்படும்.

ரூ. 1,848 கோடி மதிப்பில் விமான நிலைய விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கோவையில் கிரிக்கெட் திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன

தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்துவதால்தான் மக்கள் திமுக அரசை விரும்புகின்றனர்

வடமாநிலங்களுடன் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒப்பிட்டு பாருங்கள். வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி தெற்கை நாங்கள் வளர்த்திருக்கிறோம்’’ என முதல்வர் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | கோவையில் மக்களிடம் குறைகளை கேட்டு நேரில் ஆய்வு செய்த தலைமைச் செயலாளர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com