
அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு 'கள ஆய்வுக்குழு' ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
அதிமுகவில் முன்னாள் அமைச்சா்கள் 10 போ் கொண்ட கள ஆய்வுக் குழுவை கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்தார். குழுவில் முன்னாள் அமைச்சா்களான கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், செ. செம்மலை, பா. வளா்மதி, வரகூா் அ. அருணாசலம் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் குழுவினா் நேரில் சென்று கள ஆய்வு செய்வா். கள ஆய்வு விவரங்களை டிச. 7-க்குள் அறிக்கையாக அளிப்பா். கள ஆய்வுக் குழுவினா் வரும்போது, மாவட்டச் செயலா்கள் அனைத்து இடங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்வதற்கான முழு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
அதிமுகவின் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியை, முழு கவனத்துடன் மாவட்டச் செயலா்கள் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு 'கள ஆய்வுக்குழு' ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக, கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை இக்குழு நேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.