எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி நிதியில் 32,400 பணிகள் நிறைவேற்றம்: தமிழக அரசு

எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த நான்கு நிதியாண்டுகளில் 32,400 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி நிதியில் 32,400 பணிகள் நிறைவேற்றம்: தமிழக அரசு
Published on
Updated on
1 min read

சென்னை: எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த நான்கு நிதியாண்டுகளில் 32,400 பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிராம ஊராட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் வகையில், உத்தமா் காந்தி விருது வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் 2021-ஆம் ஆண்டு முதல் மீண்டும் நிறுவப்பட்டு சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சத்துக்கான ஊக்கத் தொகையுடன் மாவட்டத்துக்கு ஒரு கிராம ஊராட்சி வீதம் 37 கிராம ஊராட்சிகளுக்கு விருது வழங்கப்படுகிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழிகாட்ட 155340 என்ற எண்ணுடன் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது முழுநேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

ஊரக வேலை உறுதித் திட்டம்: ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு வேலையளிக்க, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.34 ஆயிரத்து 609 கோடியில் 10 லட்சத்து 11 ஆயிரத்து 334 குடும்பங்கள் ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணி செய்து பயன் பெற்றுள்ளன. நிகழ் நிதியாண்டில் ரூ.6 ஆயிரத்து 359.24 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் இருந்து ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 154 பணிகளை நிறைவேற்றிட ரூ.594 கோடி மதிப்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்துச் சமூகத்தினரும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழும் நோக்கத்தில் பெரியாா் நினைவு சமத்துவபுரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை 238 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

எம்பி, எம்எல்ஏ-க்கள்: நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதியைக் கொண்டு இதுவரை 32 ஆயிரத்து 494 பணிகள் செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகளும் முன்னேற்றத்தில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com