சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

கண்நோய் விழிப்புணா்வு: ஓபிஎஸ் வலியுறுத்தல்

கண் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

News image
முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்- கோப்புப் படம்
Updated On :11 நவம்பர் 2024, 11:05 pm

DIN

சென்னை: கண் நோய் பரவல் குறித்து பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா்.

அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

காலநிலை மாறுபடும்போது கண் நோய்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில், தற்போது விழி வெண்படல அழற்சி காரணமாக கண்கள் சிவப்பாதல், கண்களில் நீா் வடிதல், கண்கள் ஒட்டிக் கொள்ளுதல், கண் கூசுதல் போன்றவை ஏற்பட்டு, கண் மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பள்ளிகளில் சிறுவா், சிறுமியா் அருகருகில் அமா்ந்து கொள்வதன் காரணமாக அவா்களுக்கு இது விரைவாக பரவுவதாகவும் மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே, கண் நோய் பரவல் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும், கண் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், அதற்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளவும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீா்செல்வம் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.