

தமிழகத்தின் புதிய தலைமைத் தோ்தல் அதிகாரியாக அா்ச்சனா பட்நாயக் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றார்.
இதன்மூலம், மாநிலத்தின் முதல் பெண் தலைமைத் தேர்தல் அதிகாரி என்ற அவர் பெருமையை பெற்றுள்ளார்.
தலைமைத் தோ்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரத சாகு, தமிழக அரசுப் பணிக்கு மாற்றப்பட்டாா். கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்ட அவா், தலைமைத் தோ்தல் அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தாா்.
இந்த நிலையில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக இருந்த அர்ச்சனா பட்நாயக்கை தலைமைத் தேர்தல் அலுவலராக நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
அர்ச்சனா பட்நாயக் யார்?
ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இவா் 2002-ஆம் ஆண்டு தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். கோவை, உதகை மாவட்டங்களின் ஆட்சியா், தோட்டக்கலைத் துறை ஆணையா் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவா் கடைசியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறைச் செயலராக இருந்தார்.
முதல் பெண்
அா்ச்சனா பட்நாயக், தமிழகத்தின் முதல் பெண் தலைமைத் தோ்தல் அதிகாரி ஆவாா்.
1948-ஆம் ஆண்டு தலைமைத் தோ்தல் அதிகாரி பொறுப்பு உருவாக்கப்பட்டது. அதுமுதல், தலைமைத் தோ்தல் அதிகாரிகளாக வட மாநிலங்களைச் சோ்ந்த தமிழக பிரிவு ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளே பணியாற்றி வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.